கனவை திருடியது குற்றமே - இராஜ்குமார்

வானில் பறந்து திரிந்தே
முள் ஒன்றை
மிரட்டுகிறேன் - உன்
காலணியில் நுழைந்தது குற்றமே ..!!

சாரலோடு சண்டை இட்டே
தூறல் ஒன்றை
துரத்துகிறேன் - உன்
துப்பட்டா நனைத்தது குற்றமே ..!!

தோட்டத்தில் பூத்து மலர்ந்தே
தேனீ ஒன்றை
திட்டுகிறேன் - உன்
கழுத்தை கடித்தது குற்றமே ..!!

மேசை மேல் கைவைத்தே
புத்தகம் ஒன்றை
கிழிக்கிறேன் - உன்
மடியில் அமர்ந்தது குற்றமே ..!!

வீட்டில் ஒளிந்து மறைந்தே
கண்ணாடி ஒன்றை
உடைக்கிறேன் - உன்
அழகை ரசித்தது குற்றமே ..!!

படுக்கையில் சரிந்து விழுந்தே
போர்வை ஒன்றை
எரிக்கிறேன் - உன்
தேகம் தொட்டது குற்றமே ..!!

இரவில் உறங்கி மயங்கியே
கற்பனை ஒன்றை
கலைக்கிறேன் - உன்
கனவை திருடியது குற்றமே ..!!

-- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (14-Aug-14, 4:14 am)
பார்வை : 379

மேலே