உயிரில் உருகி போகும் காதல் - இராஜ்குமார்

சுற்று சுவரை
சுற்றி சுற்றி வந்து
உந்தன் உருவ நிழலை
தேடி திரிய - நீ
ஒற்றை பார்வையில்
ஒத்திகை பார்த்தாய் ..!!

குமிழி ஒன்றில்
குதித்து - என்
குருதி எல்லாம்
அடைத்து - பின்
காதலை மட்டும்
காதல் செய்தேன் ..

சுகமான ராகத்தின்
சுயசரிதை சொல்லும்
கவிதையை - உன்
காலருகே வைத்தேன் ..!!

கவியில் பிறக்கும்
காதல் எல்லாம்
கற்பனை என்றே
நீ ஒதுக்கி - என்
விரலை கொஞ்சம்
மடிய வைத்தாய் ..!!

உன்
புருவம் மட்டுமல்ல
புடவை கூட
புறக்கணித்தால்
எங்கே போகும்
என் காதல் ??

எனது இமையில்
சிறகொடித்து
சிரிக்க சொன்னால்
விழிநீர் எப்படி
வெளியேறும் ??


என் நெஞ்சில்
முதிர்ந்து போன காதல்
உன் வார்த்தை ஒன்றால்
அதிர்ந்து போனாலும்
இன்னும் இங்கே
உதிர்ந்து போகாமல்
உலவும் கவியாய் ..!!

விரலை வெட்டி
வீதியில் வீசியும்
கனவில் கூட
கற்பனை வழியில்
காதல் வருதே ..!!

பெண்ணே
காற்றில் கருகிப் போன
என் காதல் - இனி
உயிரில் உருகி
போனாலும் தவறா ?

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (14-Aug-14, 4:21 am)
பார்வை : 195

மேலே