காதல் கிறுக்கல் 2
நின் அழகின் அதிரலையில்
வாழும் அகிலம் மறக்குதடி
நின் அன்பின் உச்சத்தில்
இந்த ஜனனம் நிறையுதடி!
சிறு மௌனம் நீ கொண்டால்
என் இதயம் விம்மி வாடுதடி
அருகில் நீ இருந்தும்
பருகும் நீரும் கசக்குதடி!
வற்றிய நெஞ்சத்தில் ஒரு துளி
பாசம் சொட்டுதடி
பற்றிய உன் கரத்தால் என்னுள்ளே
நேசம் கூடுதடி!
பகலெல்லாம் உன் பார்வையிலே
நகலும் நிஜமாய் தோன்றுதடி
இரவெல்லாம் உன் நினைவினிலே
இறுக்கம் கனவாய் மாறுதடி!
செல்ல பேச்சுகளில் என்
உள்ளம் கிறங்கி கிடக்குதடி
மெல்ல தலை சாய்ந்தால்
என் மேனி மொத்தம் சிலிர்க்குதடி!
நெஞ்சில் உனை வைத்தால்
இதயம் நின்று துடிக்குமென
கொஞ்சும் கொற்றவையே
விழியில் நான் கொண்டேன்
இப்புவியில் உனை
விஞ்சும் அழகும் இனி உண்டோ??