சுமை தாங்கி
உன்னை பத்து மாதம்
கருவில் சுமந்தாள்.....
நீ நடக்க ஆரம்பிக்கும் வரை
உன்னை மார்பில் சுமந்தாள்......
நீ நடக்க ஆரம்பித்தவுடன் .
உன்னை பாதுகாப்பதற்காக
கண்களால் சுமந்தாள்.........
நீ கையில் பேனா பிடிப்பதற்காக
அவள் கையில் மண்வெட்டியை சுமந்தாள்.......
நீ சிரிப்பதற்காக வேண்டி
அவள் கண்ணீரை சுமந்தாள்........
அவள் உயிரோடு வாழும் வரை
உன்னை இதயத்தில் சுமக்கின்றாள்..........
அத்தனை சுமைகளையும்
உனக்காக சுமந்தவளை,
நீ சுமை என்று நினைத்து
அவளை நீ முதுமை
இள்ளத்தில் அனாதையாக
விட்டு விட்டு விடுகின்றாயே......!
அது அவளுக்கு
நரகமாக இருந்தாலும் கூட
அவள் உனக்காக அங்கேயும்
இறைவனிடம் பிராத்தனை செய்வாள்.....
இன்று உன் தாய்க்கு
உன்னால் இந்த நிலமை என்றால்,
நாளை உன் பிள்ளையால்
உனக்கும் இந்த நிலமை தான்
என்பதை மறந்து விடாதே....