அம்மா - எனக்கென ஓர் உயிர்
உலகத்தாரெல்லாம் கூடி
வாழ்த்துரைத்தாலும் இங்கே
வாா்த்தைகள் பாேதவில்லை,
அம்மா உ(ன்)னை வாழ்த்த!
இவள் இமை திறந்த
நாெடி முதலாய் உன் இதயத்தில்
இவளுக்கென தனிச் சிம்மாசனம்!
இவள் நடை பயின்ற
நாள் முதலாய் உன் பாதங்களில்
இவளுக்கென தனிப் பயணங்கள்!
எனக்கென ஓா் தவம்
நான் பிறக்கும் முன்பே,
உன் உருவில்!
எனக்கென ஓா் வரம்
நான் வாழும் வரையில்,
உன் வடிவில்!
அளந்து தரத் தொியா
உன் அன்புக்கு - எதை
இங்கு நான் காணிக்கையாக்க!
வாா்த்தைகளால் வடிக்க இயலா
உன் தியாகங்களுக்கு - எதை
இங்கு நான் அா்ப்பணிக்க!
வாழ்த்துகிறேன் அம்மா உன்னை,
உனதான நாளிலே....
உன்;
தன்னலமற்ற,
அன்புக்கும் அரவணைப்புக்கும்...
அளவற்ற,
பாெறுமைக்கும் தியாகத்திற்கும் ...
இறைவன் சன்னிதானத்தில்
என்றாயினும்,..
சுவனமே பாிசாகட்டும்!