கானல் தடம்-வித்யா
கானல் தடம்-வித்யா
புழங்கியறியா பாதையாதலால்
அடர்காட்டின் ஆழம் அறியாமலே
தொலைவு புலனாகாமலே
கடக்கத்துணிகிறது காட்டெருமையொன்று
வழித்துனைக்குச்செல்கிறது வௌவாலொன்று......!!
கையில் விளக்கொன்று
ஏந்திக்கொண்டு
அலிபாபாவையும் நாற்பது திருடர்களையும்
தேடிக்கொண்டு.......... !!
கைவிலங்கு பூட்டியபடி
தெருமுனையில் உருண்டோடுது
ரத்தம் சிந்திய சுதந்திரம்.............!!
தலைஎழுத்து வாசித்தபடி
ஊரோரத்தில் சிரிக்குது
வியர்வை சிந்திய நித்தியானந்தா
மந்திரம்..................!!
குதிரைக்கு.....
"கொள்ளும் தண்ணீரும் கொடுத்து
எள்ளும் தண்ணீரும் இறைத்து
கைவிலங்கறுக்க
எவன் வருவான் எவன் வருவான் என
கானல் தடத்தில்
காத்திருந்த நாளின்று வருசமாச்சே......!!
உப்பில்லா காரணத்திற்கொரு போரு
சப்பி சப்பி உயிருறிஞ்ச நூறு பேரு..........!!
தாரைவார்த்தது கச்சத்தீவு
தினம் பட்டினி நோவு
எல்லை தாண்டினதும் சாவு.........!!
பூவுதிருது
பிஞ்சுதிருது
மனச கல்லாக்கி
ஜானேறி முழம் சறுக்க
முழுசா விழுந்து மண்கவ்வி
செத்துப்போன நீதியெல்லாம்
கோப்புகளென அலங்கார அலமாரிகளில்......!!
மஞ்சள் பூசி
மீசை தொலைத்த அரசியலமைப்பு.......!!
சர்க்கரைத்தின்று
கடலைக்குடிக்கும் நீலத்திமிங்கலங்களின்
பூரிப்பு.........!!
வெட்டியான் காத்திருக்க
வீட்டிற்குள்ளே சிதை மூட்டிய
அரசியல் பிணங்கள்........!!!
சகோதர நாடுகளென்று
துதிபாடும்
உள்நாட்டு எதிரிகள்..........!!!
அதே.......
"பாட்டி சுட்ட வடை
அதை காக்கா சுட்ட கதை" தான்
கை உயர்ந்தாலும்
இலை துளிர்த்தாலும்
சூரியன் உதித்தாலும்
தாமரை மலர்ந்தாலும்.........!!!
****************இந்தியனுக்கு விடியல் இல்லையோ*************