ஒற்றுமையில் சிறந்தது எங்கள் நாடு 555

சுதந்திரம்...

நாடு நமது நாடு என்று
பெருமை கொள்வோம்...

சுதந்திர போராட்ட வீரர்களின்
பெயர்களை சொல்வோம்...

இளைஞர் சக்தி பெரிதென்று
எடுத்து சொல்வோம்...

அப்துல் கலாம் கண்ட
இளைஞர் நாடு என்று சொல்வோம்...

எம்மதமும்
சம்மதமென்று...

ஒற்றுமையில் சிறந்தது
எங்கள் நாடு என்று
மார்தட்டி சொல்வோம்...

சுதந்திர போராட்டத்தில்
பசியே தெரிந்திருக்காது...

தடி அடிகளும்
வலித்திருக்காது...

சிந்திய ரத்தத்தை
துடைக்க நேரமில்லை...

சுதந்திரத்திற்கு உயிர்
கொடுத்த வீரர்களை
நாம் மறக்கவும் இல்லை...

உயிர் கொடுத்து பெற்றுதந்த
சுதந்திரத்தை...

நாம் காத்திடுவோம்...

இந்நாளில் மறக்காமல்
வீர வணக்கம் செலுத்துவோம்...

"ஜெய்கிந்த்"

சுதந்திர தின நல் வாழ்த்துகள்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (15-Aug-14, 5:22 pm)
பார்வை : 91

மேலே