அடேய் ஏலேய் படுவாய்
தன் கற்பைத் தீண்டிய
காற்றைக் கூட-மேகம்
மழையம்பை பாய்ச்சி
மாய்த்துவிடத் துடிக்கிறது
மாராப்பு கிழித்தான்
மானம் கெடுத்தான் சிங்களன்
அடேய்! ஏலேய் படுவாய்
மதியிழந்து நீயிங்கு
மானங்கெட்டுப் போய் திரிகிறாய்
வீதியெங்கும் தமிழர்பிணம் ஈழத்தில்
விளையாடி மகிழ்ந்தாய் நீயோ
அடேய்! ஏலேய் படுவாய்
விடுதலை நெருப்பு பற்றா
வாழை மட்டையாய் கிடக்கிறாய்?
விடுதலையெனும் மரம்
வீழ்ந்துவருகிறது இனம்
இரும்பு தோளிலிருந்துமு னக்கு
தோள்கொடுப்பதை விடுத்து
அடேய்! ஏலேய் படுவாய்
எதிரியிடம் மண்டியிட்டு
ஏனடா அவன்கால் நக்குகிறாய்?
நாதியத்து போனோமா?
நம் தாய்நாட்டை யாள
நமக்கு வக்கில்லையா?
அடேய்! ஏலேய் படுவாய்
வந்தேறிகளை ஆளவிட்டு ஏன்
வால்பிடித்து அலைகிறாய்?
கோட்டைகள் கட்டிவிட்டு-அதை
கோமாளிகள் வந்தாள
வழியமைத்து கொடுக்கிறாய்
அடேய்! ஏலேய் படுவாய்
கோபத்தை துறந்துவிட்டு-நீ ஏன்
கோழையாய் இருக்கின்றாய்?
இனமழிய-இனத்தின்
அடையாளமாம் மொழியழிய
அதை நீ காணாது
அடேய்! ஏலேய் படுவாய்
வெட்டு வீரத்தோடு
சாதிப்பெருமை பீத்துகிறாய்?