வந்தே மாத்தரம்
தெரிந்தோ தெரியாமலோ
இன்று மட்டும்
நம் அரசியல்வாதிகள்
உண்மை பேசுவார்கள்
'வந்தே மாத்தரம்
வந்து ஏமாத்தரம்
(உங்களை) வந்து ஏமாத்தரம்...'
என்று கூச்சலிடுகையில்...
பத்திரமாய் காத்துக்கொள்ளுங்கள் உங்கள் சுதந்திரத்தை!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
