மனித உரிமைகளும் மக்களும்

உரிமை என்ற தத்துவத்தில் சிக்கியிருக்கும் உலக மக்கள் தங்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்ள எடுத்துக் கொள்ளும் முயற்சி சொல்லவொணா. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகையான உரிமைகளைத் தமதாக்கி கொண்டுள்ளன. ஆனால் ஒவ்வொரு மக்களும் தமது உரிமைகளைப் பற்றி அறிந்துள்ளனரா? என்ற கேள்வியை மத்தியஸ்த்தப்படுத்தும் போது அதற்கான பதில்கள் முரணாகவே வந்து சேரும். இந்த பதில்களில் கேள்விக்கான முழு விடையும் வந்து சேராது. வுந்து சேராத பதில்களை இருப்பிடமாக்கி கொண்டு வாழும் உலக தலித்துக்கள் உரிமை என்ற போர்வையில் போலியாக போர்த்தப்படுபவர்களே.
மனித உரிமைகள் ஆணையகம் நிறுவப்பெற்றிருக்கும் எல்லா நாடுகளிலும் மனித உரிமைகளை காணுவது அரிதாகும். இன்றைய நிலமையிலிருந்து வாழும் ஒவ்வொரு மனிதனும் தமக்கான உரிமைகளை அறிந்து இருத்தல் அவசியம். அநாவசிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்ளும் வழிவகைகளில் ஒன்றாக உரிமைகள் பற்றிய அறிவு காணப்படுகின்றது. இந்த அறிவு பரவலாக்கப்படும் போது மக்களின் கையிருப்பில் உரிமைகளின் துணிக்கையானது எச்சங்களாக காணப்படும். சாதாரண மனிதனும் தாம் வாழ்வதற்கான ää பேசுவதற்கான ää குழுக்களாக கூடுவதற்கான சுதந்திரத்தை பெற்றுள்ளோம் என்ற எண்ணத்தை காட்டுவது இவ்வுரிமையாகும்.
சுதந்திரத்தின் வழியில் செல்லும் மக்களின் வாழ்வுக்கு வழியாக அமைவது இவ்வுரிமையாகும். இப்படிப்பட்ட இவ்வுரிமை சில தலைகீழான எண்ணங்களைக் கொண்ட தலைகளால் கால்களில் போட்டு நசுக்கப்படுகின்றது. இந்த நசுக்களில் எத்தனையோ உயிர்கள் மாயமாகி போகின்றன.
ஒருவனை அல்லது ஒன்றை எதிர்த்து வாதாடää மக்கள் முதலில் தமது உரிமைகள் பற்றிய பெற்றிருக்;க வேண்டும். இன்றுள்ள சில நாடுகளில் உரிமைகள் பொக்கிசமாகவும் ää சில நாடுகளில் இரகசியமாகவும் நடைமுறையில் உள்ளன. இதில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதற்காக ‘மனித உரிமைகள்’ என்ற கருப்பொருளை சில நாட்டு அரசாங்கம் கற்கை நெறியாக அறிமுகப்படுத்தி வருகின்றது.
மனித உரிமைகள் பற்றிய அறிவை சிறுவயது முதல் அறிவுறுத்தி வந்தால் அதன் தாக்கம் சிறப்பானதொரு பயனை அளிக்கும். அதுமட்டுமல்லாது இம்மனித உரிமைகள் பற்றிய அறிவை வளர்க்க வேண்டும் என்ற சிலரின் முயற்சியில் கற்கை நெறி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவ்வாறானதொரு முயற்சியில் நன்மையே கிடைத்து வருவதாக கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
மனித உரிமைகள் என்ற அம்சத்தில் ‘மனித கௌரவம்’ என்ற ஒன்றும் இணைந்துள்ளது என்பது பலராலும் அறியப்படாத ஒன்று. இவ்வாறாகத் திகழும் மனித உரிமை என்ற அம்சம் இன்றைய சந்ததிகளுக்கு சென்று சேரும் முறையை ஒவ்வொரு அரசும் மேற்கொள்வது அவசியமாகும்.
இவ்வாறு அரசு மேற்கொள்ளும் முயற்சி அந்நாட்டில் இடம்பெறும்; பெரும்பாலான பிரச்சனைகளை தடுப்பதற்கு ஒரு வழியாக அமையும். இதன் தாக்கம் மனித சமூகத்தில் பல நற்பயன்களை உருவாக்கும் என்பதில் இரண்டாம் கருத்து ஒன்றும் இல்லை என்றே கூறுதல் வேண்டும்.


கோபனா பார்ஹவி
தமிழ் சிறப்புத்துறை
மூன்றாம் வருடம்.
பேராதனை பல்கலைகழகம்

எழுதியவர் : GAYATHRI - university of peradeniya (17-Aug-14, 12:19 pm)
பார்வை : 347

மேலே