மர்மக்கலை

எல்லா வர்மக் கலைகளையும்
வென்றுவிடும்
மர்மக்கலையாய்
உன் காந்த விழிப்பார்வை
எங்கு கற்றாய்
உயிரை ஊடுருவிசெல்லும்
ஒற்றன் கலையை....!!!
ஒற்றை ஆளாய் நீ எதிரில் வருகிறாய்
என் அத்தனை வீரங்களும்
சத்தமில்லாமல் சரணாகதி
அடைந்துவிடுகிறது
உன் பார்வை சந்நிதியில்...
எதிர்பார்க்கும் என்னை
எதிரில் நீ பார்த்தால்
எதிரியாக்கி பார்க்கிறது
இந்த உலகத்தையே
உன் வசமாக்கிகொண்ட அழகுக்காதல் .....
என்றாலும்
இரவுப் பகல் மாறி வருவதுபோல்
இடது வலமாக
மாறிமாறித்தான் வருகிறாய்
மறைந்து போகாத
பொழுதுகளாய்....!!!
கவிதாயினி நிலாபாரதி