மரண தண்டனை

குற்றம் செய்யாமலே
சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறோம்
குறுகிய மனம் படைத்த காலன்களால்

ஜன்னல் கதவுகளை திறந்தால்
தொலைந்துபோவோமென்ற
பயத்திலேயே இரும்புக்கம்பிகளை
இறுக பிடித்துக்கொள்கிறது பஞ்சுவிரல்கள்


இதுவரை ஒசை எங்கும் கேட்டதில்லை
மரண ஓலத்தைத்தவிர....
உயிரின் ஈரத்தை எல்லாம்
ஒருநொடியில் உறிகிறதே
பீரங்கி குழலின் கனல் மூச்சுக்காற்று.....


வீடுகளை விட்டுக்கொடுத்தும்
விடுதலை கிடைக்கவில்லை?
உயிர்களை காவு வாங்கி
காவியமா படைக்கப் போகிறது
காஸா ராணுவம்?


நாங்கள் இருப்பிடம் கேட்கவில்லை
புகலிடம் கேட்பதாவது புரிகிறதா?
வெடிகுண்டின் ஒலி கேட்ட
காதுகளுக்கு கேட்கிறதா?
வேரிழந்த பூக்களின் மொழி......

இரவும் பகலும் ஒன்றுதான்
இறக்கபோகும் உயிர்களுக்கு


எங்களுக்கு ஆயுள் தண்டனையா
இல்லை
ஆயுள்தான் தண்டனையா ..?


கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (20-Aug-14, 5:49 pm)
Tanglish : marana thandanai
பார்வை : 56

மேலே