மனிதர்கள் பலவிதம்
குறையொன்று என்றால்
இறை தேடிச் செல்வர் !
நிறையோடு வாழ்ந்தால்
முறைமாறி செல்வர் !!
திரையொடு வாழ்க்கை
திருப்பங்கள் உண்டு
வரைமுறை மாறும்
வசதியை பொருத்து...!
கருவினில் சுமந்த தாயும்
கசந்து போவாள்
காசு கையில் இல்லாத போது
கால் செருப்பும் கருவறை செல்லும்
காசுள்ள மனிதர்க்கு...!
உல்லாச விடுதியில்
தண்ணியாய் இரைப்பான்
ஊனமுற்ற மனிதனை பார்த்து கேலியாய் சிரிப்பார்
தனக்காக உழைக்கும்
மனிதர்க்கு தர்மம் செய்திட எண்ணாது
தன் வீட்டு நாய்க்கு
வெளிநாட்டு உணவை வரவழைப்பார்
என்னதான் வாலை ஆட்டினாலும்
நாய் ஈமச்சடங்கு செய்யாது
எட்டி உதைத்தவனே இறுதி சடங்கில்
மறவாதே மானிடரே!!