என் தேவதை

அவள் பாதையில்
நானும்
நடை பழக
நடை பழக்கும்
நேரத்தில்
அவளும்
இடை பழக

அவள் பேச்சில்
நானும்
தமிழ் படிக்க
தமிழ் படிக்கும்
நேரத்தில்
அவளும்
என்னை ரசிக்க

அவள் சிரிப்பில்
நானும்
மயங்கி நிற்க
மயங்கி நிற்கும்
நேரத்தில்
அவள் கண்கள்
என்னை அணைக்க

அவள் வெட்கத்தில்
நானும்
தயங்கி நிற்க
தயங்கி நிற்கும்
நேரத்தில்
அவள் இதழ்கள்
என்னை முறைக்க

எழுதியவர் : PAUL (20-Aug-14, 6:45 pm)
Tanglish : en thevathai
பார்வை : 361

மேலே