கனவுகளே கனவுகளே
கனவுகளே கனவுகளே
நிஜமாய் மாறுங்களேன்
நிஜமாகி போனால்
நான் தினம் ஜெயபேன்
வண்ண கனவுகளா
கருப்பு வெள்ளையா
எந்த கனவான போதும்
நிஜமாய் மாறுங்களேன்
உறக்கம் முடிந்து போனால்
நீங்கள் தொலைந்து போவதால்
நிஜமாய் தேடுகிறேன் வாழ்வில்
உங்களையும் சேர்த்து ....
காலையில் கலைவதும்
இரவானால் வருவதும்
உங்களின் வாடிக்கை
எனக்கு அதில்தான் வாழ்க்கை
உங்களையும் காதலிக்கிறேன்
நீங்களாவது சம்மதம் சொல்லுங்களேன்
என் காதலிபோல்
மௌனம் கொண்டு சாதிக்காமல்