அழகான வாழ்க்கை ஆனந்தமாய்

குருவிகள் போல் ஒரு கூட்டில்
வாழ்கிறோம் ஆனந்தமாய்
வீட்டில் ஒரு கவளம் உணவில்லை
எனினும் அம்மா கதை கூறி
பசி போக்கினாள்
தங்கை மிட்டாய் கேட்டு அழும் போது
அப்பா தன செருப்பு விற்று
வாங்கி வருவார்
பல துன்பம் எம் வாழ்வில்
காணப்படினும் - கடனில்லா
எம் வாழ்வு ஆனந்தமாய் எந்நாளும்
ஏழைக்கு வாழ்வு அசிங்கம்
என கண்ட மக்கள்
எம் அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
கழிவதனை காணட்டும்
கடனில்லாமல் வாழ படிப்பினை
பெறட்டும்....