வாழும் நிழல்கள்

நிறமற்ற நிழல்களை
நேசிக்கிறேன் நான்

சோகத்திலும் சுகத்திலும்
வெளி வேஷம் போடாத
நிஜ நிழல்கள்

பல வண்ணங்களில்
மாறும் பச்சோந்திகள்
நிழல்களில் இல்லை

இடத்திற்குத் தக்கபடி
எந்தவொரு நிழலும்
இழிவு வண்ணம்
பூசிக்கொள்வதில்லை

சரிந்தாலும் உடையாத
சாய்ந்தாலும் வீழாத
உண்மையில் சாயம்
வெளுக்காத உயரிய நிழல்

நிறங்கள் தீண்டாவிட்டாலும்
நிஜங்களோடு வாழ்கின்றன
காதல் நிழல்கள்

நான் விரும்பிய வண்ணங்களைக்
குடித்து சில நேரம்
கனவின் நிஜங்களில்
நானாகின்றன நிழல்கள்!!

பிரிவென்பதின்றிப் பிறந்திட்ட
நிழல்களை நேசிக்கிறேன் நான் !!

எழுதியவர் : கார்த்திகா AK (22-Aug-14, 2:41 pm)
Tanglish : vaazhum nizhalkal
பார்வை : 1311

மேலே