குறிக்கோள் ஒன்றே

குறிக்கோள் ஒன்றே
தேர்ச்சி விகிதம் விண்ணைத்தொட
கல்வித் தரம் மண்ணைக்கவ்வ
பகுத்தறிவும் பொது அறிவும்
எங்கு சென்றதோ தெரியவில்லை.
நல்லநூல்களைப் படிக்கும் பழக்கம்
கற்றுத் தரவோர் பள்ளியில்லை
பெற்றோர் எவர்க்கும் கவலையுமில்லை
குறிக்கோள் அவர்க்கு மதிப்பெண்மட்டுமே
விளையாட்டு வீரர்கள் அரசியல்வாதிகள்
நடித்துப் பெரும்பணம்சேர்த்து வாழ்வோர்
மாமனிதராய்ப் வலம்வரும் நாட்டில்
சிந்தனையாளாரா இருப்பர் நாளை
கற்கச்செல்லும் பள்ளிப் பிள்ளைகள்
நல்லமனிதராய் விளைந்திட எண்ணும்
பள்ளியொன்றில்லை எந்த ஊரிலும்
இயந்திரமனிதரே அவர்களின் குறிக்கோள்
எங்குசெல்கிறோம் என்பதும் அவர்க்கு
தெரிந்தநிலையில் தான் எல்லாம் செய்கிறார்
பாதைகள் பலவாய்ப் பிரிந்துசென்றாலும்
சேருமிடமோ பணம்பொருள் பற்றே.