உனக்கு எதற்கு காதல்

உனக்கு எதற்கு காதல்?

உன் அருமையான செயல்கள்
மதிப்பு உருவாக்கியது
மெலிதாய் சிரித்து
நல்லுறவு கொண்டாய் ..

மெல்ல நாட்கள் செல்ல
ஆதீன அன்பு கொண்டாய்
ரசிக்கவே செய்தது
ஏன் என அறியாமலேயே ..

இருந்தும் ஓர் நாள்
நீ வழக்கமான நிலை
மறந்து தயங்கியே
இதை சொல்கிறாய் ..

நீ அழகி இல்லை
இருந்தும் எனக்கு அழகு
உன் கூந்தல் அழகு
கோபம் அழகு ..

உன் சிரிப்பு அழகு
சிறுபிள்ளைத்தனம் அழகு
நீ எனக்காய் வந்தால்
என் வாழ்வே அழகு ..

அன்னைதந்தை பற்றி
கேட்டால், பிரிந்து வந்தேன்
நான் சம்பாதிக்கிறேன்
எனக்கென்ன குறை என்கிறாய்..

உன்னை பெற்று வளர்த்த
பெற்றோர் உனக்கு தேவையில்லை
எனில் நீயும் எனக்கு
தேவை இல்லாத ஒருவனே ..

உறவுகளை மதிக்க
தெரியாத உனக்கு
எதற்கு காதல்
காதலி இதெல்லாம்?

- வைஷ்ணவ தேவி

எழுதியவர் : வைஷ்ணவ தேவி (22-Aug-14, 6:05 pm)
பார்வை : 128

மேலே