புதிய கீதை 5 மனிதனும் தெய்வமாகலாம்
புதிய கீதை -5 (மனிதனும் தெய்வமாகலாம்)
எல்லாப் புகழும் எட்டும் அவர்க்கே!
நல்லார் ஒருவர் சாதனை அதற்கே.!
வல்லார் பிறப்பும் ஒரு அவதாரம்
சொல்லார் சிறப்பும் திரு வாசகமே
சாதிக்க முடியா சாதனை எதையும்
சாதிக்கத் துணிவும் இறை யோகமாகும்.
நீதிக்குள் நின்று நியாயங்கள் செய்தும்
நிந்தனை பொறுப்பதும் தெய்வீக மாகும்.
சுயசுபம் துறப்பதும் புதுயுகம் படைப்பதும்
சுத்த சன்மார்க்க சரணமும் ஆகும்.
பயமது தொலைந்தும் ஜெயம்பெற முயன்றும்
நயம் செயல் முடிப்பதும் அருளாகும்.
தனக்கென நினையா தயவுறு உள்ளம்
வணக்கத்திற் குரிய இறையுறை இல்லம்
மனிதம் சிறந்து புனிதம் நிறைந்தால்
மனிதரும் தெய்வம் என்பதும் பொருந்தும்
.
அவரிங்கு உலகில் தனியொரு பிறவி
அகிலம் வணங்கும் துணை தவத்துறவி.
மரணம் இல்லா நிரந்தர உறவன்
வரமென என்றும் இதயத்தில் இறைவன்
கொ.பெ.பி அய்யா.