அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
நிறை குறை காணாது
நிறைதனை கூட்டி
குறைதனை மாற்றி
வளர் பிறையாய் வாழும்
வாழ்க்கை ஆனந்தமே ...!
பிறர் கை நோக்காது
தன் கை நோக
கண்டது குறைவானாலும்
நிறையும் மனமே ...!
தன் கை உயரட்டும்
தாழும் கைகளை உயர்த்தட்டும்
அதுவே ஆனந்தமாகும் வாழ்வில் !
சிக்கனம் என்றுமே சிறப்பு
கையூட்டோ !! கடனோ !
வாழ்வை கண்ணீரில் தள்ளும்
பயணத்திற்கு மிதிவண்டி போதும்
தகுதிக்கு ஏற்ப ஆசை
பெரும் அமைதியை தரும்..!
அடுத்தவர் நிலைக்கு உனைமாற்ற
ஆற்றல் தேவை அதைவிடுத்த
ஆசை ஆபத்தில் தள்ளும் ...!
அன்பு உன் பண்பை வளர்க்கும்
ஆசை உனை பணக் குழிக்குள் தள்ளும்!!
மற்றவர் மெச்ச வாழ்ந்தால்
அது ஆனந்தமாகும் !
பிறர் சொச்சத்தில் நீ வாழும் வாழ்வு
எச்சமாகும் அதுவே மன அச்சமாகும்...!
அன்பான மனைவி
அழகான குழந்தை
அளவோடு ஆஸ்தி
குறைவான ஆசை
நிறைவாக்கும் மனதை...!
அனைவர்க்கும் இதுபோல்
அமைந்தால் அதுவே
அழகான வாழ்க்கை
ஆனந்தமாகும் ...!!
உள்ளத்து மிகுதியால்
ஊரெல்லாம் கடனாகி
களம் ஏறி கடல்கடந்தாலும்
கடன் தீர்ந்தாலும்
இழந்த அன்பை ஈடாக்க முடியுமா ?
குறைவாகவோ நிறையவோ
குடும்பமுடன் இருந்தாலே
கோடி இன்பமாகுமே
அதுவே அழகான வாழ்கையின்
ஆனந்தமே ...!