கண்ணாடி காதல்
நீயும் நானும்
கண்ணாடியாய் இருக்கவிரும்புகிறது
காதல்
கண்ணாடிகளாய் இருந்தாலும்
நெருங்கிசென்றால் உரசல்கள்
ஏற்படுவது உண்மையே
உரசல்கள் எப்போதும்
உறங்கிப்போவதில்லை உடனடியாக
நொடிமுள்ளாய் விழித்துக்கொண்டே இருக்கிறது
விரிசல்களை ஏற்படுத்த
விரிசல்கள்
விவாதங்களை வேரூன்றி
விவாகரங்களை கிளைபரப்பி
முடிவில் பிரிவென்னும் பின்விளைவை
முன்னிறுத்தி செல்கிறது ....
உன் பக்கத்தில் இல்லையெனினும்
உன்னை பார்த்துசிரிக்கும்
ரசமிழக்காத கண்ணாடியாய்
நேசத்தின் நிசமிழக்காமல்
நாம் இருந்தாலே போதும்
கவிதாயினி நிலாபாரதி