அழகான கோபக்காரி

என் செய்விர்கள்.....!

இதழ் ரேகை விடுத்தது
விரல் ரேகைள் பதிப்பிரோ.....!

என் விழி நோக்கமல்
வந்த வழி நோக்குவீரோ......!

அலைபேசி அலையுடன்
வாழ்வலையையும் துண்டிப்பிரோ....!

கடவுளிடம் கூட கொண்டதில்லை
மௌன விரதம் என்னிடம்
மேற்கொள்விரோ......!

என் பாத வருகையன்றி
வேறு பாத தடம் பதிய
அனுமதிப்பிரோ......!

ஆம் அதட்டல் தான்
வேறில்லை ........! !

என் செய்வீர்கள் .....!!

என்று சப்தமிட்டவள்.....

என் நிமிட மௌனம் தாளாமல்
கன்னம் நனைத்ததுடன்
தன் கோவம் மீறி
தோள் படர்ந்தாள்.......!!

ஆம்
என்னவள்
அழகான கோபக்காரி.......!!!!

எழுதியவர் : நிவிசரண் (23-Aug-14, 6:05 pm)
சேர்த்தது : சரண் ராஜ்
பார்வை : 193

மேலே