அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
நிலையாக துணையாக
நம்மோடு வாழ
ஒரு ஆசையும் பேராசையே
மனதோடு எண்ணாமல்
காலங்கள் கொடுத்ததையும்
வாழ்க்கையில் கிடைத்ததையெல்லாம்
பற்றில்லா உயிர்போல
சீரில்லா பாதை வழி என
நிலையில்லா பனித்துளி என்று
நீ உணர வேண்டும்
நிறைவான மனதே
நிலையாக உன்னில் வாழ வேண்டும்
தான் என்ற ஆணவம்
மனதோடு சேர்க்காது
நாம் என்ற அன்பில்
நால்புறமும்- நீ இணைந்தால்
துன்பத்திலும் உன் வாழ்க்கை
இன்பமாய் மாறி
அழகான வாழ்வே ஆனந்தமாய்
உன்வாழ்வில் மலரும் ...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
