மீண்டும் வானம்பாடி
மீண்டும்வானம்பாடி
வானம்பாடியாய் வாழ வகை காணுகின்றேன்
தேனமுதம் தினை கலந்து தித்த்திக்குமென்றேன்
வேதனை விட்டு ஞாலத்து நிலைக்கின்றேன்
சாதனையும் சொல விடையும் படைக்கின்றேன்
மாரிவரும் உலகில் தினம் மயுங்குகின்றேன்
மாற்றங்களை போற்ற ஏனோ தயுங்குகின்றேன்
காற்று வேகங்களை கண்டு திகைக்கின்றேன்
கற்பனை உலகிலே கணம் மிதக்கின்றேன்
கவி இதனை வனையவே தவிக்கின்றேன்
தாவி வரும் மனதையே குவிக்கின்றேன்
தடுமாற்றம் பயத்தையே உடன் நினைக்கின்றேன்
பாவிமனம் பதைத்து ஏன் திரும்புகின்றேன்
பகவானே அருள்புரிய ஏனோ மறுக்கின்றான்
தகப்பனோ பொருள் வேண்டி தவிக்கின்றான்
மணமகனோ எனைக் கேட்க மறுக்கின்றான்
மீண்டுமோர் வானம்பாடியாக வாழ நினைக்கின்றேன்
பிரியா