என்னில் என் பெண்மை

சிறுவயதில்
இரட்டைஜடையில்
அரைகுறை பாவாடையில்
சுற்றி திரிந்த பொழுதுகள்...!!!

பின்பு,
அம்மாவின் கைக்குள்
பின்னிப்பினைந்தவள்
வெளிவர சில காலம்...!!!

கொஞ்சம் வளர்ந்தவள் ...
சிலமாற்றங்களில்
தன் நிலையில் வளர்ந்து
பெண்ணானவள்...!!!

என்னை கேட்காமல் என்னுள்
வந்த என் "வெட்கங்கள்"...
யாரையும் நிமிர்ந்து பார்க்கவும்
என்னை விட வில்லை ...!!!

நானி நடப்பதில் எனக்கு குறை
இருந்ததாகவும் தெரியவில்லை...
என்னை பாதுகாக்க எனக்குள்
இருக்கும் என் "காவல்"

என் மீதான பலவித பார்வைகளில்
என் பங்கும் அதிகம் இருப்பதாக
நினைப்பதால் ...
ஆடை மாற்றத்தைவிட
பெண்மையில் அதிகம் மாற்றத்தை
உணர்ந்தவள்...!!!

கட்டுப்பாடுகள் விதித்தது
என்னக்காக அல்ல...!
என் பெண்மைக்காகவும்
அதன் சிறப்புக்காகவும்...!!!

என் மதிப்பு எவ்வளவு உயர்ந்தது
என்று
எனக்கு உணர்த்தியது

" என்னில் என் பெண்மை "

எழுதியவர் : சிவசங்கரி (25-Aug-14, 11:28 am)
பார்வை : 429

மேலே