குழந்தைத் தொழிளாலி
அம்மா கல்லுடைக்கும் மழலை நான் கல்வியில்லாக் குழந்தை நான் உடைத்தக் கல்லுக்கு ஊதியம் வாங்கி வந்தாய் நீ.
உடைக்க முடியாத கல்லுக்கு உதை வாங்கி வந்தேன் நான். பிறகு தான் தெரிந்தது ரத்தத்தின் நிறம் மட்டும் சிவப்பல்ல வறுமையின் நிறமும் அது தான் என்று சிறகடிக்கப் படவேண்டிய நான் சிறைப் பட்டுக் கொண்டிருக்கிறேன் குழந்தைத் தொழிளாலி என்ற பெயரில்

