அழகான வாழ்க்கை ஆனந்தமாய்

அழகான வாழ்க்கை ஆனந்தமாய் !


அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
என் கண் முன்னே விரியுதடி !

என் பொல்லாத காலத்தை
உன் பொன்னான காதலை
வென்றதடி !

புண்ணான கால்களுக்கு
மலர் பாதை தந்தது நீயடி !

வடியாத சோகம்
வாரியனைத்தது என்னை
துடியாக என்னை
மாற்றியது நீயடி !

அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
உன்னால
என் கண் முன்னே விரியுதடி !


திறக்காத கதவுகளும்
உன் சொல்லல் திறந்ததடி !
திரும்பும் எல்லாம்
உன் முகம் தெறியுதடி !


அழகான வாழ்க்கை உள்ளே
ஆனந்தமாய் ஆட்கொண்டது
நீயடி !
என்னை அங்கீகரித்தது நீயடி !


துறவியாய் இருந்தேன்
தனிமையில் நானும்
துணையாய் வந்தது நீயடி !


அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
உன்னால
என் கண் முன்னே விரியுதடி !


மரம் சேகரித்த
மழைத்துளியாய்
சொட்டு சொட்டாய்
அவள் நினைவு
கசியுதடி !


வாழ்வின் பொருள்
எடுப்பதில்லை கொடுப்பது
என்று உணர்த்தியது
நீயடி !



உன் தோளில் நானும்
என் தோளில் நீயும்
சாய்ந்தபடி
நாம் காலம் கழியட்டும் !

தாயின் வாசம்
உன் மடியில் நுகர்கிறேன்
நானடி !
தாரம் என்று சொன்னாலும்
என் தாய்தானடி !

அழகான வாழ்க்கை ஆனந்தமாய்
தொடரட்டும்

எழுதியவர் : paa. vignesh (25-Aug-14, 6:59 pm)
பார்வை : 97

மேலே