சரி வரும் உனக்கும் எனக்குமல்ல கவிதைக்கு

கருணையும் காதலும்
ஒன்று என்றாய்
நான் இல்லை என்றேன்
கவிதையும் காதலும்
ஒன்று என்றாய்
நான் இல்லை என்றேன்
இயற்கையும் காதலும்
ஒன்று என்றாய்
நான் இல்லையென்றேன்
என் காதலுக்கு சம்மதம் சொல்வாய் என்றேன்
நீ இல்லை என்கிறாய்
நீ சொல்லிய அனைத்தையும்
நான் ஒப்புகொள்ளவில்லைஎன
மறுக்கிறாய் ஒட்டுமொத்தமாய் என் காதலை
சரிவராது என சொல்லி தட்டி கழிக்கிறாய்
இப்போது யோசித்துப்பார்
நான் மேற்சொன்னவைகளை
சரி வரும் உனக்கும் எனக்குமல்ல
கவிதைக்கு ..............

எழுதியவர் : ருத்ரன் (25-Aug-14, 7:00 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 64

மேலே