vignesh - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : vignesh |
இடம் | : thiruppanjilli |
பிறந்த தேதி | : 01-Nov-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 63 |
புள்ளி | : 29 |
கவிதை கிறுக்கன் ! எனக்கு இயற்கை என்றால் மிகவும் பிடிக்கும் !
காற்றினை போலவே
காலத்திற்கும் அசுரகால்கள்
வேகமெடுப்பதில் !
ஆதாமும் ஏவலும்
அம்மனமாய் திரிந்ததுபோய்
அழகாய் ஆடைகள் உடுத்ததொடங்கினர் !
தேவனாய் பிறந்த நமது
உடலில் மெல்ல மெல்ல
தெரிகிறது
சாத்தானின் சாயல் !
நெருப்பை கண்ட
மனிதன் அதில்
தன்னை தானே
எரித்துக்கொண்டான் !
இருட்டில் பயணித்த
மனித பாதங்கள்
அறிவியலின் வெளிச்சத்தில்
ஒளி பெறுகின்றன !
தொழிலாளர்கள்
வேர்வை சிந்தி பெறவேண்டிய
ஊதியத்தை இங்கு
ரத்தம் சிந்தியும்
கிடைத்ததாக தெரியவில்லை !
வசதியானவர்களின்
வசதிக்காக
வறியவர்களின் வாழ்க்கை
இங்கு அடகு வைக்கப்படுகின்றன !
இங்கு
மனிதம் என்பது
வெறும் எழு
சப்தமின்றி என் வாசல்
வருகிறது
உன்னுடைய மௌனங்கள்
வார்த்தைகள் !
மொழிபெயர்கிறது
உன் கண்கள் !
தீராத காயத்திற்கு
மருந்தாகிறது
உன் ஒவ்வரு வார்த்தையும் !
காற்றில் உன் குரல் மட்டுமே
இன்னிசையாக கேட்கிறது !
நான் அதிகம் பேசிடவிரும்பவில்லை
உன் பேச்சால் !
ஓயாத கடல் அலை போல்
நீ பேசிட வேண்டும்
அழியாத கரையாக
உன் குரலை நான் கேட்டிடவேண்டும் !
உன் உரையாடலில்
பைய பைய
நகர்கிறது என் வாழ்க்கை !
.
பா. விக்னேஷ்
கிழிந்த கால்சட்டை !
நரம்புப்பை !
தோல் செருப்பு !
தூக்குசட்டியில் கூல் !
என வறுமை நிறைந்த
பால்யத்தை
திருத்தி அமைத்த
சாரதா டீச்சரை
மாத்தழகி போனதிலிருந்து
அவர்களே தேடிகொண்டிருகிறது
மனம் !
பா. விக்னேஷ் .
மண் நான்
வாசம் நீ !
மரம் நான்
எந்தன் செதுக்கிய உளி நீ !
மலை நான்
மேகம் நீ !
புகைப்படம் நான்
புன்னகை நீ !
சேய் நான்
தாய் நீ !
கடல் நான்
அலை நீ !
நதி நான்
கரை நீ !
மெழுகு நான்
திரி நீ !
ஜன்னல் நான்
தென்றல் நீ !
மொழி நான்
உச்சரிப்பு நீ !
குழல் நான்
பண் நீ !
புல் நான்
பனி நீ !
கடிகாரம் நான்
முள் நீ !
வானம் நான்
நட்சத்திரம் நீ !
பறவை நான்
சிறகு நீ !
உடல் நான்
உயிர் நீ !
விழி நான்
பார்வை நீ !
இரவு நான்
கனவுகள் நீ !
கவிஞன் நான்
கவிதை நீ !
ஓவியன் நான்
ஓவியம் நீ !
சின்னச்சின்ன கோபங்களிலும்
விளையாட்டாய் முறைக்கையுலும்
அன்போடு என்னை கொஞ்சுகையுலும்
தள்ளி நின்று என்னை ரசிபதிலும்
அதட்டி ஆணையிடுவதிலும்
என்னக்கே எனக்கானவன் என்று
சுயதாபம் கொள்கையுலும்
பெரும்பாலும்
என் தாய்என மாறிவிடுகிறாள்
அவள் ( மனைவி ) !
பா. விக்னேஷ்
எழுத்து நடத்தும் கல்லூரி மாணவ மாணவியருக்கான கவிதைப் போட்டி 2014
போட்டி விவரங்கள்:
1. போட்டி வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 17 வரை மட்டுமே.
2. ஒரு மாணவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
3. கவிதை காப்புரிமை பெற்றதாக இருத்தல் கூடாது. சொந்த கவிதையாக இருத்தல் வேண்டும்.
4. கவிதை சமர்ப்பிக்கும் முன், மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல் (Email) மற்றும் அலைப்பேசி எண் (Mobile Number) கொண்டு எழுத்தில் பதிவு (Register) செய்தல் வேண்டும்.
5. கீழ்காணும் தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் மட்டுமே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
தலைப்புகள்:
கனவுகள் மெய்ப்படவேண்டும்
துகிலாத நினைவுகள்
உணர்வுக
என்ன தேடிக்கொண்டிருக்கிறாய்
அந்த தாள்களுக்கு மத்தியில் !
எதிரில்தானே இருக்கிறேன் நான் !