என் காயத்திற்கு மருந்தில்லை

ஏதோ ஒரு ரயில் பயணத்தில்
தொலைகின்ற குழந்தை நான்

நெடுஞ்சாலை ஓரத்தில் நிற்கும்
நீரில்லா மரமும் நான்

நான் நிலவில் நிற்கிறேன் குளிரவில்லை
என் நேரம் எங்கும் நகர்வதில்லை
என் தேநீர் கோப்பை நிறைவதில்லை
முடிவதில்லை
என்னால் முடியவில்லை .

போதும் போதும் நாடகம்
பொருத்தமில்லை வேஷம்
காலம் யாவும் என்னைக் கொள்ளும்
காதல் ஒரு விஷம்
போகும் பாதை தெரியாமல்
மிதக்குது தேகம்
நான் போன பின்பு வருந்தினால்
யாருகென்ன லாபம்
பாவம்
பாவம்
என் நிலத்தில் மழையில்லை
சாபம்
சாபம்
என் காயத்திற்கு மருந்தில்லை

எழுதியவர் : senthuzhan (26-Aug-14, 6:54 pm)
சேர்த்தது : senthu
பார்வை : 85

மேலே