அய் மிஸ் யு அம்மா

இந்த படைப்பு எழுத்து நண்பர் கவிஞர்
கிருத்திகா தாஸ் அவர்களுக்காக ....

முகமறியாது
முகவரி அறியாது
முதன் முதலாய்
முதன்மையான
எழுத்து தளத்தின் வாயிலாய்
முகமூடி அணிந்த
முகத்துடன் அறிமுகம் ....

அறிமுகம்
ஆனந்தம்
ஆனந்தம்
பேரானந்தம் ...!

எழுத்துக்களின்
பரிமாற்றத்தின்
எழில்மிகு பரிசு
எழுத்தில்
அச்சிடமுடியா
ஏற்றமிகு நட்பு !!

எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
எழுத்துக்களால் இனைந்து
எண்ணங்களின் வலிமையால்
நட்பு வளயைத்தில்
நலமாய் சுழன்று கொண்டு இருக்கும்
தருணத்தில் ..

கால சக்கர சுழற்ச்சியின்
தாக்கத்தால் ஒரு
சிறிய இடைவெளி

சிறிய இடைவெளி
சீரியதாகி விடுமோ என்று
சிந்தித்ததின் தாக்கம்

ஐ மிஸ் யு அம்மா ....

எழுத்துக்களின்
வலிமை அப்பப்பா ......

எழுத்துக்களால்
இணைந்த உறவுகள்
என்றும் உடைவதில்லை ....

எழுத்துக்களின்
வலிமைக்கு
வளமாய் ஒரு ஜே போடுவோம் !!!!

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (26-Aug-14, 10:31 pm)
பார்வை : 210

மேலே