புதிதாய் பூத்ததோர் கவிதை

புதிதாய் பூத்ததோர் கவிதை ஒன்று
வாழ்த்து சொல்ல விழைகிறது

செல்லும் முன் தன் வரிகளை
வைர சொற்களால் அழகுப்படுத்திக்கொண்டது
ஏன் இவ்வுளவு சினத்தை
என்றது மரபுகள்
ஊர் போற்றும் அவள் புன்னகைக்கு
இவை சிறு பரிசு என்றது

பின்பு தன் நடையை சிறிதென
சிறப்பாய் அழகுப்படுத்திக்கொண்டது
ஏன் இத்தனை தெளிவு
என்றது இலக்கணங்கள்
குழந்தை தனமான அவள் பேச்சுக்கு
இவை சிறு இனிப்புகள் என்றது

செல்லும் வழியில் தன் எழுத்துக்களை
திறம்பட புதுப்பிதுக்கொண்டது
ஏன் இவ்வுளவு தாகம்
என்றது பிறமொழிகள்
சுற்றம் மெச்சும் அவள் அறிவுக்கு
இவை சிறு ஊற்று என்றது

அவசரமாய் செல்லும் போது உதவி
கேட்ட இலக்கணத்துக்கு வாரியிறைத்தது
ஏன் காலத்தினால் இப்பெரிய உதவி
என்றது இலக்கியங்கள்
பணம் பாராது மனிதர் பார்க்கும் அவள் எண்ணத்திற்கு
இவை சிறு அர்ப்பணம் என்றது


அவள் அருகில் சென்றதும் தன்
எழுத்துக்களின் சொல் வேகத்தை குறைத்துக்கொண்டது
ஏன் குறைவு உன் மொழி என்னும் கர்வத்தில்
என்றது எழுத்துக்கள் .
மரியாதையை பிறருக்கு சொல்லித்தரும் அவளுக்கு
இவை சிறு மரியாதை என்றது.

வாய்த்திறக்கையில் ஒருமுறை சிந்தித்து பின்
வரிகளில் அனுபவ சாரல் பூசியது
ஏன் எதிர்கால பார்வையின் குவிப்பு
என்றது கவிதை வழிமுறைகள்
ஆராய்ந்த அனுபவ பிறப்பிடமான அவளுக்கு
இவை சிறு தொண்டுகள் என்றது .

இறுதியில் தன் கவிதையை தன் தோளில்
போட்டுக்கொண்டது உரிமையோடு
ஏன் இவ்வுளவு உரிமை
என்றது பேனா
நட்பின் முகவரி இவளிடம்தான் உள்ளது
ஆகையால் இவை சிறு தோழமை என்றது

ஆச்சிர்யத்தோடு நான் கேட்டேன் இது யாருக்கென்று
புதிதாய் பூத்த இந்த கவிதை சொன்னது
என் போல், புதிதாய் பூத்த பூப்போல் இன்று
பிறந்தநாள் கொண்டாடும் என் தோழிக்கு என்று
அதுசரி ஆனால் இயற்றியவன் உரிமையின்றி
நீ ஏன் உன்னை சிறப்பாக்கிகொள்கிறாய் என்றேன்
இக்கவி சொன்னது
அவன் சிறந்ததை பரிசாய் கொடுக்க நினைக்கிறான்
நானோ கொடுக்கும் பரிசு தன்னை சிறந்ததாய்
கொள்ளவேண்டும் என நினைக்கிறேன் என்றது

வாயடைத்து போனேன்
வார்த்தைகள் இன்றி தவித்தேன்
மொழிக்கு அவள் மேல் இருக்கும்
பற்றும், பாசமும் கண்டு உயிரற்ற சிலையானேன் .

எழுதியவர் : இராமநாதன் (27-Aug-14, 1:12 am)
சேர்த்தது : இராமநாதன்
பார்வை : 93

மேலே