நினைவுகள்
அதிகம் பேசிக்கொண்டதில்லை
அருகில் இருந்தபோதும்,
நேருக்கு நேராய் பார்த்துக்கொண்டதில்லை...
அழைப்பிதல் இல்லாத பயணம்,
என் பாதங்கள் அவள் நிழலை பின்தொடர்ந்தது...
இருவருக்கும் சத்தமில்லாத ரகசிய தூதுவன்
இருவரின் மௌனங்கள் மட்டுமே...
ஆழமாய் ஒரு காதல்....
இருவருக்கு மட்டுமே புரிந்தது இறுதிவரை ...
ஆனால்,
ஊரை பொறத்தவரை நான் ஒரு தலை காதலன்...
இப்படிக்கு
- சா.திரு -