அழகான வாழ்க்கை ஆனந்தமாய்

முதியோர் இல்லம்
இந்த உலகம்
புதிதாக தான் இருந்தது
வந்த புதிதில்
இவர்களுக்கு

வெளி உலகம்
மறந்து புது உலகத்தை
ஏற்று கொள்வது
சற்றும் எதிர் நோக்கா சுமையாகத்தான்
இருந்தது இவர்களுக்கு ....


மூன்று வேலை உணவு
உடுத்த உடை
இதர செலவும்
இங்கே இலவசம் தான்
ஆனாலும் விருப்பில்லை இவ்வுலகில்
இவர்களுக்கு

நாளும் மாறி போகும்
அப்படித்தான் போனது
இவர்களுக்கு

கடவுள் என்பவனை
நினைத்து கொண்டார்கள்
இருக்கிறானா? இல்லையாயென்று?

பழக பழக பாலும் புளிக்கும்
அப்படித்தான் ஆகி போனார்கள்
மாக்களுக்கு இவர்கள்

தாம் உணவுட்டி, கைப்பிடித்து
சொல்லிகொடுத்ததை கற்று கொன்றவர்கள்
தாம் சொல்லிகொடுகாததையும்
செய்வார்கள் என்று அறியவில்லை
இவர்கள்

ஆனாலும்
தான் மாக்களையும், பேர மழலையும்
நினைத்து தான் புரித்தனர்
இவர்கள்

இருப்பாலரும் இங்கே ஒன்றாகிப் போனார்கள்
முதுமை என்னும் பருவத்தில்

புதிய நட்பு,
புதிய வாழ்வு முறை
பழக்க பட்டு போனது

இந்த உலகம் இவர்களுக்கு
அடிமையாகிப் போனது

"முதுமை" முதிர்ச்சி அடைதல்
"முதிர்ச்சி" பகுவப்படுத்தியது
இவர்களை

மரணத்தை எண்ணிக் கொண்டிருக்கும்
இத்தருனங்களிலும்
கடை நொடி வரை ஜீவன் துடிப்போடு
இந்த அழகான வாழ்க்கை(யைய்) ஆனந்தமாய்
வாழக் கற்றுக்கொன்றுவிட்டார்கள்...

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (27-Aug-14, 2:46 am)
பார்வை : 102

மேலே