+தொடரும் புலம்பல் ஒலி +

செலவோ செலவு
வரவோ குறைவு
வாழ்க்கை ஓட்டம்
பயத்தைக் கூட்டும்
காரம் அதிகம்
போட்டக் குழம்பாய்
மாதம் முழுதும்
உரைப்பாய் நகரும்
காதல் போல
சிலநாள் சுகமாய்
இதயம் கிழித்து
பலநாள் பாரமாய்
தீடிரென உறவு
வாசல் வந்தால்
வாயோ வரவேற்கும்
நெஞ்சோ பதைபதைக்கும்
மருத்துவச் செலவும்
விசேசச் செலவும்
கேளிக்கை செலவும்
வாடிக்கை ஆனால்
வேடிக்கை மனிதனின்
சாதனை வாழ்க்கை
இழுத்துஇழுத்துத் தான்
இன்றினைக் கடக்கும்
நாளையும் இன்றாய்
நேற்றும் நாளையாய்
சுற்றி வளைத்திவன்
கழுத்தினைக் கொரிக்கும்
நிம்மதி என்றெனக்
கனவினைக் கண்டு
தூக்கத்தின் நேரமே
நிம்மதிக் களமாய்
சேமிக்கும் நினைவினை
மட்டுமே சேமித்து
சாமிக்கும் கடன்சொல்லி
நகருது வாழ்க்கை!