கடுதாசி இன்னும் வரக் காணலேயே மச்சான்

மச்சான் நினைவில்
ஆசை வச்சான்
மச்சம் மேல்
கண்ணை வச்சான்
மச்சினிச்சி என் மேல்
உசுரை வச்சான்
மச்சினி என் பெயரை
பச்சை குத்தி வச்சான்....♥

புல் அறுக்கப் போகையிலே
கையைத் தொட்டுப்புட்டான்
புல்லாங் குழல் மன்னன் போல்
என்னை மயங்கிப்புடடான்..♥

கள்ளி நான் நகைக்கையிலே
தள்ளி நின்று ரசிக்கையிலே
முள்ளி வாய்க்கால் வரை
நான் பார்க்கையிலே
பள்ளி கொண்டான்
நெஞ்சினிலே.....♥

பார்த்துப் பார்த்து
துணியை அடுக்கி வச்சேன்
பாவி நினைவையும்
சேர்த்து வச்சேன்
பாதி வழி வந்து
பட்டணம் அனுப்பி வச்சேன்
பாவி மனசை மட்டும்
பூட்டி வச்சேன்....♥

ஆசை வந்து என்னை
ஆட்டுது புள்ள
ஆனால் நான்
கைநாட்டுப் புள்ள...♥

நாளு எழுத்து எழுதிக்
கொடுத்துப்புட்டு போடியம்மா
நாளு நாளாய் தூக்கம்
இல்லையடியம்மா....♥

கடுகு டப்பாவில் அம்மா
சேர்த்த சில்லறையில்
நடுக்கத்தோடு
எடுத்தேன் என் கையில்
கடுதாசி போ பணம்
தேவையெனில்
கடு கடுப்பார் அம்மா பெரும்
பாடாய்ப் போகும் சமளிக்கையில்....♥

முத்திரை வாங்கி
ஒட்டிப்புட்டேன்
முத்தையாக் கிட்ட
கொடுத்துப்புட்டேன்...♥

மச்சாங்கிட்ட இருந்து
மறு பதிலைக் காணோமே
மச்சாங்கிட்ட இருந்து
கடுதாசியைக் காணோமே....♥

காத்திருக்கேன் நான்
வழி பார்த்திருக்கேன்
காத்தாடி போல் நாங்கு பக்கத்துத்
தெருவையும் பார்த்திருக்கேன்...♥

காணவில்லைடி பொன்னம்மா
காணவில்லையிடி அன்னம்மா
காணவில்லையே கடுதாசியை
ஆத்தா மங்கம்மா
ஏங்கவச்சமச்சானே ஏனோ
தாமதம் கடுதாசிபோட பட்டணம்
கொடுக்கும் நடுக்கமா ??பாதை
தெரியாத தயக்கமா ??
கடுதாசியை இன்னும்
வரக் காணலயே
மச்சானே என்னை
ஏங்க வச்சானே...♥

எழுதியவர் : தழிழ்த்தேனீ இ.சாந்தகலா (27-Aug-14, 8:05 am)
Tanglish : kavithai
பார்வை : 152

மேலே