சாதிச்சுபுட்டான் காதலில்
கட்டு மரத்துக்குச் சொந்தக் காரன்
கட்டுடம்புக் காரன்
கருவாப் பையன் என் கன்னத்துக்கு
அவன் மச்சக் காரன்..."!!!!
கரும்புத் தோட்டத்தில் எறும்பு
ஊருது என்று குறும்பு காட்டி
அரும்பு மீசையால் என்
இதழ் மீது கீறீப் பார்த்த
வம்புக்காரன்....!!!!!
பாவக்காய் உண்ணும் போது
முகம் சுளித்துவிட்டு அம்மாவைப்
பாராட்டி காக்கபிடிக்கும்
புலமைக் காரன்...!!!!
தோட்டத்தில் திறமை பெற்ற
படிப்பாளி என்று போலி
விளக்கம் கொடுத்து அப்பாவை
தன் வசம் மடைக்கிப் போட்ட
மந்திரக் காரன்....!!!!
பஞ்சு மிட்டாய் கொடுத்து கொஞ்சிப்
பேசி தங்கையையும் மிதி வண்டி
கற்றுக் கொடுத்து பந்து தூக்கிப்
போட்டு தம்பியையும் தன் வசப்
படுத்திப்புட்டான் மாயக்காரன்...!!!
கண் அடித்து நாக்கைக் காட்டி
அப்பப்ப ஆணழகன் நடை போட்டு
அவன் கன்னக் குழியில் என்னையும்
தள்ளி விட்டான் கெட்டிக் காரன்...!!!
சாய்த்துப் புட்டான் குடும்பத்தையே
தந்திரத்தால் ஜெயித்துப்புட்டான்
காதலிலே...