என் உள் மனம் பேசுகிறது
இராத்திரியின் நிசப்தத்தில் என்
பழைய ஞாபகங்கள் நிழலாடுகின்றன
என் பாடசாலை வாழ்வைச் சொல்லவா???
என் காதல் வாழ்வைச் சொல்லவா???
என் இளம் பராய வாழ்வைச் சொல்லவா???
எதை சொல்ல? எங்கிருந்து சொல்ல???
தரம் ஒன்றில் பாடசாலை செல்லும் போது
நேரம் பிந்தியதால் அடி பட்ட ஞாபகம்
இன்னும் என் மனமதில் நிழலாடுகின்றது
தரம் ஒன்றில் கமலாம்பிகை ஆசிரியர் எனக்கு
கல்வி கற்பித்தார் என்பதும் என்னால் மறக்க முடியாமல்
உள்ளது தான் அதன் சிறப்பு.
அவ்வாறே தரம் இரண்டு,மூன்று,நான்கு,ஐந்து களில்
செல்லத்துரை ஆசிறியர், கனகேஸ்வரி ஆசிரியர்,வசந்தி ஆசிரியர்,சின்னத்தம்பி
ஆசிரியர், என்போரையும் என்னால் மறக்க முடியாமல் உள்ளமை
அதன் சிறப்பு.
தரம் ஆறிலிர்ந்து பதினொன்று வரை கற்பித்த ஆசிரியர்களான
வில்வநாதன்,கருணாநிதி, செல்வரத்தினம், தர்சிக ஆகிய வர்களையும்
மறக்க முடியாமல் உள்ளமை அதன் சிறப்பு.
அதன் பிறகு,காதல் கணவன் மாதிரி நடித்தவனால்
ஏமாற்ற்றப்பட்டேன் என்பதை என்னால் ஜீரணிக்க
முடியவில்லை.
அதன் பிறகு,தற்போது உள்ள நிலையை
அடைந்து விட்டேன்.
இன்னும் பல ஞாபகங்கள் உள்ளன.
எல்லாம் எழுத ஒரு கவிதை போதாது.
மீண்டும் மறு கவிதையில் சந்திப்பேன்.