நல்லா கவிதை எழுதுறாரப்பா

எழுத்து டாட் காமில் எனை
இழத்து விட்டான் நண்பன் இன்று
கவிதை கிறுக்காய் நான் அலைகிறேன்
கவிஞன் என முலாம் பூசி
கவிதை என எதையோ கிறுக்கி
தளமேற்றி காத்திருந்தேன் போற்றுவோர் உண்டென்று
நொடிக்கு ஒருமுறை என் மாத்திரை கணினியில்
விரல் ரேகை அழிந்ததே யன்றி கவிஞர்கள்
விழி திறக்கவில்லை உசுப்பேத்திய நண்பனை
ஊரெல்லாம் தேடுகிறேன் பார்த்தால் சொல்லுங்கள் !

எழுதியவர் : முரளி (28-Aug-14, 9:56 am)
பார்வை : 259

மேலே