தமிழ் எனது உயிர்

தமிழ் எனது தாய்மொழி
தமிழ் எனது உயிர்மொழி
தமிழுக்கு புகழ் சேர்க்க
நற் கவிஞர்கள் நல்மனது
அன்பர்கள் பலகோடிப்பேர்
பார் முழுதும் தமிழ் உயர்வை
உணர்த்திட வீண்வேலை இது
வேலைக்காகாது இது என்று
எள்ளி நகைப்போரும் பாரில்
பிறந்திடும் போதே தமிழன்
தமிழனாகத்தான் உன் சிற்றறிவு
துணை கொண்டு கற்றிடலாம்
மொழிகள் பலசுயநலம் வேண்டி
கற்காமலேஉன்னை வந்து சேர்வது
உன் தாய்மொழி ஒன்றே... எம்மொழி
சார்ந்தவரும் தன் தாய்மொழியை
இகழ்ந்து பேச தன்மானம் கொண்டு
வீறு எழுகின்றனர் நீயோ உன்
தாயாகிய தமிழை தாழ்த்தி
நினைத்து அவமானப்படுத்தி
அகமகிழ்வது போல் அண்டிப்
பிழைக்க நடிக்கிறாயே உன்
மனசாட்சிக்கு தெரியும் உண்மை
எண்ணி மருகும் உன்னை
விரைவில் வெளிப்படும் உன்
தாய்மொழியாம் தமிழ் மீது
நீ கொண்டுள்ள பற்று.. தமிழ்
அன்னை உன் வருகைக்காக
என்றும் பொறுமை காத்து
நின்றிருப்பாள் என்றும் நிலைத்த
பெருமையுடன் இம்மண்ணில்...

எழுதியவர் : உமா (28-Aug-14, 12:10 pm)
Tanglish : thamizh enathu uyir
பார்வை : 294

மேலே