நீவிக் கொடுத்தல்

ஸ்ரீ நீவி கூல் டிரிங்க்ஸ்
குளிர்பானக் கடையொன்றின் பெயர்
அற்புதமான புதிய பெயர் நீவி

காசை வாங்கிக் கொண்டு
பாசமழை பொழிந்து
வாடிக்கையாளர்களை
நீவித தட்டித் தடவிக் கொடுத்து
குளிர்பானத்தைக் கொடுப்பார்களோ
என்னவோ?

தாவிக் குதித்துச் சென்று
நீவியின் குளிர்பானம் குடிக்க ஆசை தான்
தப்பித் தவறிக் கீழே விழுந்து
இடுப்பொடிந்து போனால்
நீவிக் கொடுத்து மருத்துவமனையில்
சேர்ப்பார்களோ?

இது என்ன நீவலோ
நாமறிய ஆவல்.




நீவி என்ற சொல் அறக்கட்டளை, மானியம் கொடு, வலுவான அடித்தளம் என்ற பொருள்களில் பயன்படுத்தடுகிறது

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (28-Aug-14, 10:14 am)
பார்வை : 252

புதிய படைப்புகள்

மேலே