அன்பே அம்மா அம்மாவே அன்பு

கண்ணீருடன் கலங்கி நிற்கிறேன்
கவலை மறந்திருந்த நாட்களை
எண்ணி துயரம் மனதில் இருந்நாலும்
என் துன்பம் எண்ணி கலங்கினாயே
தவிர ஒருநாளும் உடலால் நீ பட்ட
வேதனையை காட்டிடாமலே இன்று
பட்ட மரமாய் விலங்குகள் நிறைந்த
காட்டில் விட்டுச் சென்றிட எப்படி
மனம் வந்தது உனக்கு... ஓய்வின்றி
எங்களுக்காக ஓடிய நீ ஓய்வில்
அமர்ந்ததும் உள்ளங்கைகளில் வைத்து
தாங்கிட காத்திருந்தோமே ஆனால்
ஓய்வு பெறும் முன்னரே காலன்
கைகளில் உன்னை ஒப்படைக்க
சித்தமாய் இருந்ததை அற்ப
பிறவிகளான நாங்கள் அறியவில்லேயே
உன் சந்தோஷ நாட்களை காண ஆசைப்பட்ட
எங்களின் சந்தோஷம் முழுதும் நீ
எடுத்துச்சென்று காலம் முழுதும்
கண்ணீருடன் கலங்கிட செய்திட்டாயே..

எழுதியவர் : உமா (28-Aug-14, 12:12 pm)
பார்வை : 147

மேலே