விநாயகர் வாழ்த்து

கரமைந்தாய் அருள்தரக் கொண்டானை
காட்சிதரும் ஓமெனும் உருவானை,
சிரமதுதான் யானையாய்க் கொண்டானை
சீக்கிரமாய் வந்தருள் புரிவானை,
வரம்பலவும் தந்தருள் பெரியானை
வாதாபி கணபதி பெயரானை,
சிரம்பணிந்தே வாழ்த்தி நின்றால்நல்
செல்வம்புகழ் சேர்ந்து நிலைத்திடுமே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Aug-14, 7:14 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 83

மேலே