கூட்டல் கழித்தல் பெருக்கல் போட்டிக்கவிதை
கணக்கில் மட்டும் கூட்டலில்லே
வாழ்வில் உண்டுங்க
இணக்கமான சமூகம் காண
அன்பை கூட்டுங்க
கணக்கில் மட்டும் கழித்தலில்லே
அதையும் உணருங்க
மனதில் நல்லெண்ணம் வைத்து
தீமை கழியுங்க
கணக்கில் மட்டும் பெருக்கலில்லே
தெரிந்து கொள்ளுங்க
திறமைகளை பெருக்கிக் கொண்டால்
தவறு இல்லீங்க
கணக்கில் மட்டும் வகுத்தலில்லே
சரியா சொல்லுங்க
வாழ்வை இனிதாய் வகுத்தோமென்றால்
இனிக்கும் வாழ்க்கைங்க
கணக்கைப் போல வாழ்க்கைகூட
கஷ்டம் தானுங்க
பழகிவிட்டால் கஷ்டம் கூட
இஷ்டம் தானுங்க