உறுத்தல்
ஏதோ ஒன்று ...
நெஞ்சைக் கீறிக் கூறுபோட்டு
காயமாக்கும்....
உறுத்தல்
தவறுகளின் பிம்பமாய் விழ
மனம் ஒரு கண்ணாடியா ?
ஒரு சின்ன புன்னகையும்
மலரவில்லை
மனச்சிரையினுள் சிக்கி .......
காலம் கடந்தும் முன்சென்றால்
துரத்தியபடியே வருவதேனோ ?
அந்த உறுத்தல் .......
தவரியவரின் மனத்துள் எழும்
மனத்தூய்மை உடையவரானால் ......
நச்சுப் பாம்பின் விஷமும் அமிர்தமே !
இந்த உறுத்தலின் முன்னால் .....
தவறியவர்களே!
சொல்வதற்கே உறுத்தும்
உறுத்தலில் மாள்வதற்கு
தண்டனையையே ஒரு வரமாய்
எற்றுக்கொள்ள்ளலாமே!