கூட்டல் கழித்தல் பெருக்கல்
இளமையும் கல்வியும்
அட்சர கணிதத்து
இரு வேறு நேரியல்
சமன்பாடுகள்.
உடையாத மனவுறுதி
திடமான நம்பிக்கை
சமன்பாட்டில் சமன்குறிகள்
பணிவு பண்பாடு
பார் போற்றும்
பொறை உடைமை
துணிவு தன்மானம்
கனிவு நல்லிரக்கம்
கை தூக்கிவிடும்
பெரும்தன்மை
அன்பு இறை பக்தி
ஆதரிக்கும் நல் நட்பு....
களவு கையூட்டு
மதுவுண்ணல்
பொய்யுரைத்தல்
தெளிவே இல்லாத
அறியாமை பொய் வேசம்
அகத்தை எரிக்கின்ற
பொறாமைத்தீ
அகங்காரம்
அழிவைக்
கொடுக்கின்ற
கடுங்கோபம்
கெடு நட்பு....
நல்லவைகள் தீயவைகள்
தம் நிறைக்கேற்ப
நிலைமாறா
நேர் மறைப்
பெறுமானம் கொண்டு
சமன்பாட்டில்
வலம் இடமாய்
சிதறிக் கிடக்கின்ற
மதிக்கப்பட்ட
மதிப்பறிய வேண்டிய
கணியங்கள்.
கணித்தபின் - இக்
கணியங்களை
கூட்டலில் கூட்டி
கழித்தலில் நீக்கி
தேவைக்குப் பெருக்கி
ஈற்றில் தீர்த்திடும்
போது துலங்கிடும்
எண்ணின் பெறுமதி
பிரதிபலிக்கிறது
ஒவ்வொரு மாணவனின்
எதிர்காலத்தை!