தமிழ் எனும் சாகரம்

தமிழிற்கு
பெண்ணென்றும் பெருமை என்றும்
கண்ணென்றும் கற்பகம் என்றும்
விண்ணென்றும் விந்தை என்றும்
பண் என்றும் பவித்திரம் என்றும்
பலவாறாய் வடிவம் தந்த
வண்ணக் கவிஞரே!!

நான் தமிழை
ஆழம் காண இயலா
ஆழி என
அர்த்தம் கொள்வேன் !!

ஆமாம்

பாவத்தால்
நாம் பெற்ற
பிறவி பெருங்கடல் அல்ல
நம்
பாவம் எல்லாம்
களையும்
ஒரு பவித்திரமான கடல்!!

நீச்சல்
அறியாவிடினும்
நீள விரிந்த
இந்த
நித்திய நீரில்
நீ மூச்சு திணறி
மூர்ச்சையாக மாட்டாய்
அறிந்துகொள்!!

மாறாக
முக்தி இன்பம் பெறுவாய்
தெரிந்துகொள்!!

உணவில் உப்பு
தூக்கலாக இருந்தால்
உதவாது அது விருந்துக்கு

ஆனால்

தமிழ் சாகரம்
தாங்கிய உவர்ப்பு
எம் உயிர்க்கு
தரும் சிலிர்ப்பு
உணர்வாய் அதை நீயும்
உட்கொண்ட பின்பு!!

ஆய்வு முடிவாக அன்று
அலெக்ஸ் கோளியரும் (Alex Collier)
அகிலமெல்லாம் ஒரு நாள்
அமுத தமிழையே
அப்பியாசம் செய்ததாய்
அடித்து சொன்னதை
அடிக்கடி நான் எண்ணி
ஆனந்தம் கொள்கிறேன்!!

தமிழ் கடல்
தந்த கொடைகள்
கணக்கற்றவையாம்!!

அளவு கோல்
கொண்டு அதன்
ஆழம் அறியும்
அளவிற்கு
அறியாமை பொருந்தியவள்
அல்ல நான்!!

பரிசோதனை குழாயில்
நான்
பரந்து விரிந்த
தமிழ் சமுத்திரத்தின்
நீர் மாதிரியை
பத்திரமாய் இட்டு
பரிசோதிக்கும் ஏக்கம்
கொண்டேன்!!

ஆசிட்-பேஸ் டெஸ்ட் (Acid-base test)
அல்ல இது- தமிழின்
அற்புதம் பற்றிய டெஸ்ட்

சங்கம் வளர்த்த
எம் தமிழை
சல்லடையாக்கிய
சதிகளை
தமிழின் சலம் கொண்டு
சலவை செய்யும்
ஆர்வம் கொண்டேன்!!

இதன் மூலம்

சரித்திரத்தில்
சபை ஏறாத
பல பாடல்கள்
சந்தங்கள் பெறுமெனவும்
அரங்கேறாத
தமிழ் அத்தியாயங்கள்
அங்கீகரிக்கப்படுமெனவும்
நம்பினேன்!!

ஆகையால்

பரிசோதனை
முடிவுகளை
ஒரு முறை
பட்டியலிட்டு
காட்டுகிறேன்
படியுங்கள்!!

அங்கோர்வாட் (Angkor wat) என்ற
அகிலம் வியக்கும்
பிரமாண்ட ஆலயம்
கம்போடிய மண்ணில்
கவி பாடிய
தமிழ் சாகரம்
செய்த ஒரு சாகசம் அன்றோ!!

பூம்புகார் என்ற
புராதன துறைமுகம்
புவியினில் தமிழ் கடல்
புனைந்து வைத்த
புதுமையன்றோ!!

தமிழின்
பத்தாயிரம் ஆண்டு
பழமை தனை
நக்கீரர் நல்கிய
இறையனார் அகப்பொருளும்
இயம்பியதாய் ஒரு
ஞாபகம்!!

எகிப்திய ஈசா பிரமிட்டிலும்
எண் மடங்கு பெரிதான
தஞ்சை பெரும் கோவிலை
தானமாய்
எம் தரணிக்கு தந்தது
எம் தமிழ் கடல்!!

அவுஸ்திரேலியா கமரூன் என
உலகின் அத்தனை மூலைகளிலும்
ஆதிவாசிகள் வாயிலாக
ஆட்சி நடத்துகிறது
இந்த ஆழ்கடல்!!

ப்ரோக்ரிதம் வேதம் கலந்து
புனித சமஸ்கிருதம் தந்து
பாளியின் சாயல் பெற்று
பைஞ்சிங்களமும் தந்தது
தெவிட்டாத எம் தமிழ் கடல்!!

திராவிடத்துக்கெல்லாம்
அதிபதியாய்
தெலுங்கு கன்னடம் , மலையாளம் , துளு
என பிதாமொழியாக தனது
பிம்பத்தை காட்டிற்று எம்
தமிழ் மா கடல் !!

ஜேசு கிறிஸ்து மரிக்கையில்
"எல் ஓய் லாமா சாவ தா நீ" என
தமிழிலே தரிசித்தார்
தம்பிரானை
அதனால் தமிழ்
அது தெம்மாங்கு பாடும்
ஒரு தெய்வீக கடல் !!

இவை வெறும்
எடுகோள்கள் இல்லை
பரிசோதனையால்
நிறுவப்பட்ட
சில நிர்மலமான
உண்மைகள் !!

எனினும்

புள்ளி விபரம்
சொல்லி நான்
புளாங்கிதம் அடையவில்லை
தமிழுக்கு புகழ் ஆரம் சூட்டவில்லை
தமிழ் சமுத்திரத்தில்
சத்தமின்றி
சவமாக உறங்கிக்கொண்டிருக்கும்
எம் சரித்திரத்தை
சனித்தெழ செய்யும்
சமரின் முதற் கட்டமே இது !!

நன்றி

எழுதியவர் : (29-Aug-14, 1:45 pm)
பார்வை : 136

மேலே