மணியனின் அடாவடிக் காதல்

அட இன்னா மாமு
அங்கிட்டும் இங்கிட்டும்
என்னாத்த பண்ணத் தாவற. . .
சும்மா கெடக்குறத்
திண்ணைலத் தூங்கி
தெனாவட்டா உவுந்து கெடக்குற. . . .
==========

போதாத காலம்
பொறம்போக்கு நானும்
போயும் போயும்
உன்னப் புடிச்சேன. . .
பொல்லாத பொம்பள
இல்லாத காதலை
உங்கையான்ட சொல்லத் தாவுறேன் . . .
==========

வேலவெட்டி இல்லா
வெட்டிப்பய உனக்கு
வேட்டி ஒரு கேடாடா. . .
மனுசனா இருந்தாக்கா
மானம் ரோசம் வோணும்
மருவாதயாத் தள்ளிக் கோடா . . .
===========

போடிப் போடி இவளே
உன்ன விட்டா எனக்கு
பொருத்தமா ஆரும் இல்ல . . .
வம்பு வேண்டாம் சிறுக்கி
மாமன் ஒரு பொறுக்கி
மச்சம் தந்துடுவேன் உன்னயிறுக்கி. . .
==========

தூ. . . தூ. . . போடா
துப்புக் கெட்டப் பயலே
தூரமாப் போயி நில்லடா . . .
எக்குத் தப்பா நடந்தா
எட்டி ஒன்ன ஒதைச்சு
எமன்கி்ட்டத் தள்ளுவேன்டா . . . .
==========

அயித்தானுக்குத் தெரியும்
அத்தனயும் நடிப்பு
அச்சாரம் தந்து போயேண்டி. . .
அடுத்தவேள சோறு தர
அரசாங்கமே இருக்கு
அதப்பத்தி கவல வுடடி. . . .
==========

சோறு துண்ணு நீயும்
ஏரு மாடு கணக்கா
ஏணி போல வளர்ந்து புட்ட. . .
என்ன பண்ண நானும்
ஏதேதோ பேசி
எம்மனசைக் கெடுத்துபுட்ட. . .
எப்படியோ கவுத்துப்புட்ட . . .
என்னை ஏமாளி ஆக்கிபுட்ட . . . . . .

==================













குறிப்பு:- ச்சும்மா டமாசு.
தப்புருந்தா குட்டுங்க.

=*=*=*=*=*=*=*=*=*=*

எழுதியவர் : மல்லி மணியன் (29-Aug-14, 9:47 pm)
பார்வை : 91

மேலே