உ
![](https://eluthu.com/images/loading.gif)
உனக்காக உருவாக்கப்பட்ட உலகத்தில்,
உன்னால் உருகிக்கொண்டிருக்கிறேன் !
உடலிலும், உதிரத்திலும், உயிரிலும்,
உன் உணர்வுகளே உறைந்திருக்கிறது !
உன்மீது உரிமை உள்ள உறவுகளுக்காக,
உன்மீது உயிர்கொண்ட உறவை உதறாதே !
உலகத்தில் உன் உயிர் உள்ளவரை,
உனக்காக உயிர்வாழ்வேன் !